மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சேவை - தி.மு.க. தேர்தல் அறிக்கை

மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சேவை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Update: 2019-03-19 05:52 GMT
சென்னை

மக்களவை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்.போது கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரமும் சரிந்துள்ளது. வேலை.வாய்ப்பின்மை, வேளாண்மை நலிந்துவிட்ட அவலத்தையும் நாடு சந்தித்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வாயிலாக, மதசார்பற்ற அரசை மத்தியில் உருவாக்க தி.மு.க. உறுதியளிக்கிறது.

தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுகிறேன். ஆன்லைன் மூலமாக தேர்தல் அறிக்கைக்கு ஆலோசனைகள், கருத்துகள் வழங்கியவர்களுக்கு நன்றி.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 10-ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை 

* கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

* பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சேவை.

* மனித கடத்தலை தடுக்க சட்டம் இயற்றப்படும் .

* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம். 

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் 

* காவிரி படுகையை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

* சேதுசமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை 

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்