வழக்குகளில் ஜாமீன் பெற அலைபவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? கார்த்தி சிதம்பரம் மீது ஹெச்.ராஜா தாக்கு

வழக்குகளில் ஜாமீன் பெற அலைபவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? என கார்த்தி சிதம்பரம் மீது ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-03-24 13:28 GMT
சென்னை,

நீண்ட இழுபறிக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் நள்ளிரவு கட்சி தலைமை வெளியிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் டெல்லியில் இந்த பட்டியலை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் (தனி) - டாக்டர் கே.ஜெயக்குமார், கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ.செல்லகுமார், ஆரணி - எம்.கே. விஷ்ணுபிரசாத், திருச்சி - திருநாவுக்கரசர், கரூர் - ஜோதிமணி, தேனி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விருதுநகர் - மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி எச்.வசந்தகுமார், புதுச்சேரி- வைத்தியலிங்கம்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. விரைவில் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து  நீண்ட இழுபறிக்கு பின் கார்த்தி சிதம்பரம் பெயரை காங்கிரஸ் அறிவித்தது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து  கார்த்தி சிதம்பரம் களம் காண்கிறார்.

இந்நிலையில் ஆலங்குடியில் ஹெச்.ராஜா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:- 

ப.சிதம்பரம் குடும்பமே வழக்குகளை பேக்கேஜாக எடுத்துள்ளது; வழக்குகளில் ஜாமீன் பெற அலைபவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா?  
கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை. மக்கள் பலத்துடன் வெற்றிபெறுவேன் என்றார்.

மேலும் செய்திகள்