பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-04-12 23:45 GMT
புதுடெல்லி, 

இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

மிகப்பெரிய நடிகர்

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை பாராட்டியுள்ளாரே?...

பதில்:- அதற்காக நான் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதில் அவர் யோசிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் கருத்து கூறி இருப்பதற்கு மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகர், அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்சினையை, பேசி இருப்பது நல்ல விஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.

கேள்வி:- அவரது பாராட்டை பா.ஜ.க.வுக்கு ஆதரவு என எடுத்துக்கொள்ளலாமா?

பதில்:- நான் அவரை 2013, 2014-ல் சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்க வில்லை.

ஆலோசனை

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் கட்சி எதுவும் அவர் தொடங்கவில்லை. ஒரு சகோதரராக அவருக்கு ஏதேனும் ஆலோசனை கூற விரும்புவீர்களா?

பதில்:- அவர் என்னை நேரில் சந்திக்கும்போது, அது பற்றி பேசுவேன்.

கேள்வி:- அவரை சினிமாவில் நடிக்க கூறுவீர்களா? அல்லது அரசியலுக்கு வருமாறு ஆலோசனை சொல்வீர்களா?.

பதில்:- நான் அவருக்கு ஆலோசனையை நேரிலே கூறுவேன். ஊடகம் வாயிலாக ஏன் கூற வேண்டும்?

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்