இந்து மதத்திற்கு எதிரானவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்; இந்து சமய துறவிகள் முடிவு

இந்து மதத்திற்கு எதிரானவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என இந்து சமய துறவிகள் முடிவு எடுத்துள்ளனர்.

Update: 2019-04-13 13:40 GMT
சென்னை,

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பொதுமக்களிடம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் வகையில் பேரணிகள் மற்றும் பொது கூட்டங்களை நடத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்து மதம் மற்றும் பண்பாட்டை மதிப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என இந்து சமய துறவிகள், மடாதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.  சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் குறித்து அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இதுபற்றி கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சில அரசியல் கட்சிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகின்றன.  அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.  இந்து மதம் மற்றும் பண்பாட்டை மதிப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்