இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது - மு.க.ஸ்டாலின்

இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-21 11:27 GMT
சென்னை,

ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் 3 தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர்  பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  160 பேர் பலியானதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலங்கை தேவாலய குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிற இனத்தவர், வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்  என கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொழும்பு  குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்