காற்றழுத்த தாழ்வு பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். #IndiaMeteorologicalDepartment

Update: 2019-04-25 09:37 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும்.  தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும்.  24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறியுள்ளார்.

இதேபோன்று கனமழை தொடர்பாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்