‘மோடியிடம் விசுவாசமாக இருப்பதை காட்ட எல்லை தாண்டி பேசுகிறார்கள்’ அமைச்சர்கள் மீது திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

‘மோடியிடம் விசுவாசமாக இருப்பதை காட்ட எல்லை தாண்டி பேசுகிறார்கள்’ என்று அமைச்சர்கள் மீது திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2019-05-15 20:30 GMT
சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்ததை வைத்து கமல்ஹாசன் பேசியிருக்கலாம். அவர் சொன்ன வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கலாம். கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தவர் தானே?. கமல்ஹாசன் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவரது நாக்கை வெட்டுவேன் என்று அமைச்சர் பேசுவது தவறு.

மோடியிடம் விசுவாசமாக இருப்பதை காட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் எல்லை தாண்டி பேசுகிறார்கள். கமல்ஹாசன் பிரசாரத்திற்கு போகக்கூடாது என்பதற்காக உருவபொம்மைகளை எரித்து வன்முறையை ஏவுவது சரியானதல்ல.

பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது. எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் இருக்கலாம். எல்லா மதங்களிலும் பிறந்து இருக்கலாம். ஒரு மதத்தை சார்ந்தவர்களை மட்டும் சொல்வது தவறு. பயங்கரவாதத்திற்கு மதம், சாதி கிடையாது.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்