ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதி கட்டிடங்கள் : எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

ரூ.47 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2019-06-15 00:09 GMT
சென்னை, 

புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணியில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூரில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி மற்றும் திருப்பூரில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் நல பள்ளி மாணவர் விடுதி ஆகிய 5 விடுதி கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை, திருவள்ளூர் மாவட்டம் வடகரை, கே.ஜி.கண்டிகை மற்றும் சோழாவரம், சென்னை சைதாப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 19 விடுதி கட்டிடங்கள்;

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம்; திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம்; திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை மற்றும் வடகரை உள்ளிட்ட இடங் களில் இயங்கிவரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள்;

காஞ்சீபுரம் மாவட்டம் பரமசிவம் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் என மொத்தம் ரூ.47.30 கோடி மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களுக்கான விடுதிக்கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்