சேலத்தில் திரையரங்குகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-19 09:41 GMT
சேலம்,

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிபிளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரசின் உத்தரவுப்படி திரையரங்கின் உரிமையாளர்கள் 30 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். ஆனால் சேலத்தில் உள்ள 25 திரையரங்குளில், 3 மட்டுமே கேளிக்கை வரி செலுத்தியுள்ளது. மீதமுள்ள 22 திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி செலுத்தாமல் 80 லட்சம் வரை பாக்கி உள்ளதாக மாநகராட்சி உதவி ஆணையர் ராஜா தெரிவித்தார்.

இதையடுத்து, முதல் கட்டமாக ரூ.25 லட்சம் வரை பாக்கி வைத்திருந்த, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு மல்டிபிளக்ஸில் இருந்த 5 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற திரையரங்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்