முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது

முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-24 05:08 GMT
சென்னை,

முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்,  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு, சட்டசபை கூட்டத் தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?, எந்தெந்த நாட்களில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது.  இந்த கூட்டத்தில், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை தெரிவிக்க இருக்கின்றனர். அதன் அடிப்படையில், சபாநாயகர் ப.தனபால் முடிவு எடுத்து அறிவிப்பார்.

மேலும் செய்திகள்