சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்

நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர்.

Update: 2019-07-02 23:47 GMT
சென்னை, 

பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடப்பட்டது.

இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அடுத்தடுத்த விசாரணையின் போது விஷால் நேரில் ஆஜராக விலக்கு கோரி அவரது தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு சேவை வரித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, விசாரணைக்கு தேவைப்படும்போது விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றார். இதை விஷால் தரப்பு வக்கீல் ஏற்றுக்கொண்டு, மனுவை திரும்ப பெற்றார்.

இதைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக வழக்கை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

மேலும் செய்திகள்