காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-07-11 06:28 GMT
புதுடெல்லி,

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது.   இந்த 4 மாநிலங்களும் இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹூசைன் பதவிக்காலம் ஜூன் 30ம்தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அந்த பதவிக்கு அருண்குமார் சின்கா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.  பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு இதற்கு உத்தரவிட்டது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் (2ந்தேதி) மத்திய நீர்வள ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து அவர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் என்ற கூடுதல் பொறுப்பினை வகித்திடுவார்.  காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை அருண்குமார் சின்கா  நடத்துவார்.  மத்திய நீர்வள ஆணையம், காவிரி ஆணையத்துக்கு வேறு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்