தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

தமிழகம் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-19 09:18 GMT
சென்னை

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம், புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை நேற்றுவரை 19% குறைவாக இருந்தது.  நேற்று மழை பெய்ததால் இது குறைந்துள்ளது. வரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து தென்மேற்கு பருவமழை சராசரி நிலையை அடையும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகள் லேசான மழைக்கு வாயப்பு உள்ளது.

சென்னையில்  அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

அதிகபட்சமாக  சின்னகல்லாறு (கோவை) -10செ.மீ., கடலூர் -9 செ.மீ., அரியலூர், புதுகோட்டை - 5 செ.மீ. பதிவாகி உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்