தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு ‘எலக்ட்ரிக்’ கார் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் முதல் ‘கோனா எலக்ட்ரிக் கார்’ தமிழகத்தில் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Update: 2019-07-23 19:15 GMT
சென்னை, 

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழக அரசுடன் ‘எலக்ட்ரிக்’ கார் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ‘கோனா எலக்ட்ரிக்’ (எஸ்.யூ.வி.) என்று பெயரிடப்பட்ட இந்த பேட்டரி கார் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு இயக்கத்துக்கு தயாராக உள்ளது.

இந்த காரை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு இந்த கார் வரும். இந்தியாவின் முதல் ‘கோனா எலக்ட்ரிக் கார்’ தமிழகத்தில் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற கார்களை போன்று இந்த காரிலும் அனைத்து வசதிகளும் உள்ளன. டீசல், பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரி மின்சாரத்தில் இது இயங்கும். இந்த காரை 6 மணி நேரம் ‘சார்ஜ்’ செய்தால் 350 கி.மீ. தூரம் வரை ஓட்ட முடியும். ‘பாஸ்ட் சார்ஜிங்’ வசதி மூலம் ஒரு மணி நேரத்துக்குள் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் விலை பற்றி கார் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்