குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்தனர்

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்துச் சென்றனர்.

Update: 2019-07-28 21:45 GMT
நெல்லை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டியது. அவ்வப்போது வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தற்போது கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை குறைந்ததால், குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

இந்த நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழவில்லை.

படகு சவாரி 

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

குற்றாலம் அருவிகளில் குளித்த பின்னர், ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்