புதுச்சேரி சட்டசபையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுச்சேரி சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் அளிக்காததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-08-27 09:35 GMT
புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதனால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் ஆகியோர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

இந்த அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், ஆளுநர் மீதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பதாகவும், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்