முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணத்தின் உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2019-08-28 08:42 GMT
சென்னை: 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும்.
முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டும் முதலீடு கிடைக்காமல் தத்தளிக்கிறது என கூறி உள்ளார்.

தொழில்துறையில் தமிழகத்தை முன்னேற்ற மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் 

நான் வெளிநாடு செல்வதை கொச்சைப்படுத்தி வருகிறார் ஸ்டாலின்.மு.க. ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை ஸ்டாலின் தெரிவித்தது இல்லை என கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்