திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2019-08-30 06:57 GMT
சென்னை,

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது . 2006-ல் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்தது, சிறப்பு நீதிமன்றம்.

மேலும் செய்திகள்