நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைவு: மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. மத்திய அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-08-30 15:50 GMT
சென்னை,

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பது, இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை காட்டுகிறது. வேலையிழப்பு, தொழில்துறை பிரச்சினைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்