பின்லாந்து கல்வி நிலையங்களை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்

ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டார்.

Update: 2019-08-31 08:24 GMT
சென்னை,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகிலேயே கல்வி முறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டின் கல்வி நிலையங்களை அவர் இன்று பார்வையிட்டது மட்டுமல்லாமல் கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் உபயோகிக்கும் கல்வி கற்றல் நடைமுறை குறித்து கலந்துரையாடினார்.

7 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, இலவச உயர்நிலைக்கல்வி, கல்வி முறையை மாணவர்களே தேர்வு செய்யும் வசதி, ஆகியவை பின்லாந்து நாட்டு கல்வித்துறையின் சிறப்பம்சங்களாகும். மேலும், பின்லாந்து நாட்டு மக்களும், மாணவர்களும் நூலகத்தை அதிகம் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்