எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை - தஹில் ரமானி

எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று தஹில் ரமானி கூறி உள்ளார்.

Update: 2019-09-10 05:23 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி ஏற்றார். இவரை, நிர்வாக காரணத்துக்காக மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று அவர் வரவில்லை.  இன்று 2 வது நாளாக அவரது அமர்வில் வழக்குகள் பட்டியலிடப்படவில்லை. 

இந்த விவகாரத்தில் அவரது கருத்துக்களை அறிய அணுகியபோது நீதிபதி தஹில் ரமானி “நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவோ அல்லது இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவோ விரும்பவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்“ என கூறினார். தி இந்து இணையதளத்தில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்