அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2019-09-15 03:16 GMT
சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தார்.

பின்னர் அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொண்டர்கள் பலர் திரண்டு அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


மேலும் செய்திகள்