‘சீன அதிபரை தமிழகம் உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ பிரதமர் மோடி பாராட்டு

சீன அதிபரை தமிழகம் உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டுவிட்டரில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2019-10-11 23:51 GMT
சென்னை,

சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மிக பிரமாண்டமான வரவேற்பை தமிழகம் வழங்கியிருந்தது. ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை நினைவு கூரும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மகிழ்ச்சி

சென்னை வந்து இறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-சீனா இடையேயான உறவு, இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.

இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டு, தமிழகத்தை பாராட்டியிருந்தார்.

அவரின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்