தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-22 07:51 GMT
சென்னை,

மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும். அரபிக் கடலில் தொடர்ந்து அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்