சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.

Update: 2019-10-23 03:04 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனிடையே, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.04க்கும், டீசல் விலை ரூ.69.83க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்