8 நாட்களாக நீடித்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

8 நாட்களாக நீடித்த போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-01 06:50 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும்  மருத்துவர்கள்  கடந்த 8 நாட்களாக ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு  கோரிக்கைகளை வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து நேற்று முதலமைச்சர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரின் வேண்டுகோளை ஏற்று தற்போது தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதையொட்டி, பணி முறிவு  (பிரேக் இன் சர்வீஸ்) நடவடிக்கையை அரசு கைவிடுகிறது. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்கும். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்ற மருத்துவர்களுக்கு நன்றி.

8 நாட்களாக நீடித்த போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்