மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-02 06:26 GMT
தேனி,

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து திண்டுக்கல், தேனி மாவட்ட பாசனத்திற்காக இன்று  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுப்படிக்காக மஞ்சளாறு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

கோரிக்கையை ஏற்று இன்று முதல் 135 நாட்களுக்கு முதல்போக சாகுப்படிக்காக தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து முதலமைச்சர்  உத்தரவின் பேரில் இன்று மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் செய்திகள்