சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்று கொண்டார்.

Update: 2019-11-11 04:42 GMT
சென்னை,

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்தநிலையில், பீகார் மாநிலத்தின் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.பி. சாஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  நவம்பர் 13ந்தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.

அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்