சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் - சென்னை போலீஸ் கமிஷனர்

சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி உள்ளார்.

Update: 2019-12-10 07:31 GMT
சென்னை

சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் பேசும் போது கூறியதாவது:-

காவலன் செயலி மூலம் உதவி கோருவோருக்கு காவல்துறையினர் விரைந்து வந்து உதவி செய்வார்கள். காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். காவலன் செயலியை இணையதள இணைப்பு இல்லாதபோதும் உபயோகிக்கலாம்.  

நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை நகரங்கள் திகழ்கின்றன. இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை 18வது இடத்திலும், கோவை 19 இடத்திலும் உள்ளது. சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும் போது, காவலன் செயலியை பதிவிறக்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்