வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Update: 2019-12-13 23:45 GMT
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கான தீவிர பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும்.இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களை திருத்தவோ 23-ந் தேதியில் இருந்து ஜனவரி 22-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3-ந் தேதி முடிவடையும். துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11-ந் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்