பொங்கல் பண்டிகையையொட்டி இதுவரை அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று மாலை 5 மணி வரை அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-01-11 14:53 GMT
சென்னை,

பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், வெளியூர் செல்வோருக்கு வசதியாக, சென்னையில் 30 முன்பதிவு மையங்கள்  திறக்கப்பட்டுள்ளன. பொங்கலையொட்டி, ஜனவரி 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  நேற்றிரவு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 845 பேர் பயணித்துள்ளனர். நள்ளிரவு 12 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் மற்றும் 354 சிறப்பு பேருந்துகள்  என மொத்தம் 2 ஆயிரத்து 579 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று மாலை 5 மணி வரை 3,779 அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்