உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-01-12 14:34 GMT
சென்னை,

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதன்படி உள்ளாட்சி தேர்தல் பணியில் மாவட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்கள் திடீரென உயிரிழந்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது,  உயிரிழந்த தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடைநம்பி ஆகியோரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்