சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

Update: 2020-01-15 10:20 GMT
சேலம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று சேலம் சென்றார். தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் இன்று தனது உறவினர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடினார். குலதெய்வ கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், அங்கு பொங்கல் வைத்தார். இதில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறியடி நிகழ்ச்சியிலும் உற்சாகமாக பங்கேற்றார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட தரண் புற்று நோய் மருத்துவமனையை முதலமைச்சர் பார்வையிட்டார். அதன்பின்னர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

மேலும் செய்திகள்