சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

Update: 2020-01-25 02:00 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் குறைந்து ரூ.77.03க்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.71.11க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்