கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு -ஓ.பன்னீர்செல்வம்

கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-14 05:29 GMT
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு 

* இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 

* முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது

 * குடிநீர் வழங்கல் ,சுகாதாரம் கல்வி ,உணவு ,பாதுகாப்பு, அணுகு சாலை கட்டமைப்பு, இடுகாடுகள் ,தெருவிளக்குகள் ,வீட்டுவசதி ,வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ,பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

* 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய வன நிலவர அறிக்கையின்படி 2014ஆம் ஆண்டை காட்டிலும் 83.02 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு தமிழ்நாடின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

* 2014ஆம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 264 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்