கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து - தமிழக அரசு

2017 ஆம் ஆண்டு ஜூலை 19-ல் கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

Update: 2020-02-22 08:11 GMT
சென்னை,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 56 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்தவுடன் கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் விவசாயிகளும் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 45 கிராமங்களையும் அங்குள்ள விவசாயிகளை பாதிக்கும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கடலூர், நாகை மாவட்டங்களில் 2017 ஆம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்,  கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு. பெட்ரோலிய ரசாயன மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டல  அரசாணையையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்ததற்கு 45 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்