தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? - மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம்

தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா? என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-03-03 20:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்ததாகும். தொல்பொருள்துறை கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழக கோவில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இருக்கிறது என்று மத்திய மந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையை பறிக்கும் விபரீத யோசனை.

இதன்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வரும். இதனை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசர கடமையாகும். இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும்? என்று கேள்வி கேட்பார்கள்.

அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்-நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்