கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.

Update: 2020-03-12 05:26 GMT
சென்னை

தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் மாற்றத்திற்கு நான் 3 திட்டங்களை வைத்து உள்ளேன்.கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை. 

திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் தலா 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை

தேர்தல் முடிந்த பிறகு ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும்கட்சி பிரமுகர்கள் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.

நான் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிக்கு புதிய பதவி, தேர்தல் முடிந்த பிறகு அந்த பதவிகள் தேவையில்லை

நான் ஆரம்பிக்கும் கட்சியில் தேவையான அளவிற்கு மட்டுமே நிர்வாகிகளை வைத்துக் கொள்ளப்போகிறேன்

சட்டப்பேரவையில் வயதானவர்கள் தான் அதிக எம்எல்ஏக்களாக உள்ளனர். 50, 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே எம்எல்ஏக்களாக உள்ளனர்.

எனது கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்எல்ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும்

வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் அவர்களுக்கு 30 முதல் 35 சதவீத எம்எல்ஏ சீட்டுகள்

ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகளை அரசியலுக்கு அழைத்து வர உள்ளேன்

இளைஞர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு செல்வது புது மின்சாரம் பாய்ச்சுவது போல் இருக்கும்

இளைஞர்கள், திறமையானவர்கள் சட்டப்பேரவைக்கு செல்ல நான் ஒரு பாலமாக இருப்பேன்

தேசிய கட்சிகளை தவிர மாநில கட்சிகளில் ஒரே நபர் கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளனர்

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு எனக்கூறினார்.

மேலும் செய்திகள்