டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: அரசு அலுவலர்கள் 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை கோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் அரசு அலுவலர்கள் 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-18 07:58 GMT
சென்னை, 

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குருப்-2ஏ தேர்வில் பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையைச் சேர்ந்த தீபக், திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்பாலாஜி ஆகியோர் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்