ஆம்னி பஸ்களில் முன்பதிவு நிறுத்தம் -பஸ் சேவை தொடருமா? என்பது இன்று முடிவாகிறது

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சுமார் 1,700 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-03-24 01:30 GMT
சென்னை, 

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சுமார் 1,700 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆம்னி பஸ் சேவைகளை குறைக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, ஆம்னி பஸ்கள் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த சேவைகளையும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து பேசினர். அதில் ஆம்னி பஸ்களின் முன்பதிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து பஸ் சேவை தொடருவது குறித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மாறன் கூறுகையில், ‘‘அரசு அறிவுறுத்தியபடி, இன்று(நேற்று) வரை பஸ் சேவைகள் தமிழகம் முழுவதும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. நாளை(இன்று) அரசு அறிவிக்கும் அறிவிப்பை தொடர்ந்து பஸ் சேவை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்