தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கவும்; பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்

தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-03-28 09:28 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமுடன் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி, 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். 

இந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி தேவை என பிரதமர் மோடிக்கு  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ந்தேதி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வங்கி கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்