தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Update: 2020-04-02 06:19 GMT
சென்னை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 அதிகரித்துள்ளது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளது மேலும் கோரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர் அவர்கள் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக பொதுசுகாதாரத்துறையின் மூலமாக செய்தி தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது அதில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் இது போன்ற பாதிப்பு யாருக்காவது தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால் உடனே அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றும் அறிவிங்கப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

நோய்த்தொற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களுக்கு 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் வணிக நிறுவனங்கள் மக்கள் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்