"ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்க கூடாது என்று பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-04-11 10:52 GMT
சென்னை,

"ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற காணொலி காட்சி ஆலோசனையின் போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், வேளாண்மை துறைக்கு என தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்.  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்க கூடாது. 

ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்"ரயில் மூலமாக பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க வேண்டும்” என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்