தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனையில் ரூ.294 கோடி வசூல்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்த விற்பனையால் ரூ.294 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.

Update: 2020-05-09 05:09 GMT
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 4ந்தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி முதல் மது விற்பனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் மது விற்பனை தொடங்கியது.  கடந்த 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன், கடைகளில் போட்டி போட்டு கொண்டு ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி பலர் குவிந்து விட்டனர்.

முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை இருந்தது.  2வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இதில், 2வது நாளில் ரு.122 கோடி வசூல் ஆகியுள்ளது.  மதுரையில் அதிக அளவாக ரூ.32.45 கோடி வசூலாகியுள்ளது.  கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையால் ரூ.294 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது.

மேலும் செய்திகள்