சீர்காழியில் கடல் சீற்றம்; 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சீர்காழியில் கடல் சீற்றத்தினால் 5வது நாளாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2020-05-20 09:12 GMT
சீர்காழி,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, இன்று மாலைக்குள் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.  புயலை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் தயார் நிலையில் உள்ளன.

இதனுடன், ராணுவம், விமானம், கடற்படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த போதிய எண்ணிக்கையிலான குழுக்களும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளவும் மற்றும் மாநில அரசுக்கு துணையாக செயல்படவும் தயார் நிலையில் உள்ளன.

இந்த புயலால், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முதல் பூம்புகார் வரையிலான 16 கடலோர கிராமங்களில் கடல் சீற்றமாக உள்ளது.  இதனால், 5வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.  சுமார் 3 ஆயிரம் படகுகள் பாதுகாப்பாக கரை பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்