ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிப்பு

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Update: 2020-05-22 03:16 GMT
சென்னை,

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று  முதல் அமைச்சர் பழனிசாமி  கடந்த 2017-ல் ஆக. 17 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு  மேற்கொண்டு வந்தது.  இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதல்  அளித்துள்ளார். 

இதன்படி, வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.  புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்