தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-06-29 13:12 GMT
சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,212 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. 37,331 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 30,039 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 ஆக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.  

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-






மேலும் செய்திகள்