தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-06-29 14:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் ஒன்று என கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

கிருஷ்ணகிரி 5, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 10, ராணிப்பேட்டையில் 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனியில் 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லையில் 5, திருப்பூர் 26 இடங்கள் என மொத்தம்29 மாவட்டங்களில் 703 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.

மேலும் செய்திகள்