சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: தீவிரமடையும் விசாரணை; கைதான காவல்துறையினர் வேறு சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான காவல்துறையினர் ஐந்துபேரை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக சிபிசிஐடி இன்று முக்கிய முடிவெடுக்க உள்ளது.

Update: 2020-07-06 05:52 GMT
சென்னை

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை சித்தரவதை செய்து கொன்ற வழக்கில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பேரூரணி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி உதவி ஆய்வாளர் ரகு கணேஷிடம் அடி வாங்கிய கைதிகள் பலர் அங்கு உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ரகு கணேஷ் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்புக் காரணங்களை கூறி 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். 

கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுவதால் யாரும் நெருங்க முடியாத வகையில் 5 பேரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான காவல்துறையினர் ஐந்துபேரை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக சிபிசிஐடி இன்று முக்கிய முடிவெடுக்க உள்ளது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையாக் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரண நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்