சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

Update: 2020-07-07 08:00 GMT
சென்னை,

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்  ஆகிய இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தனர்.
போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினரும் உறவினர்களும்  குற்றச்சாட்டு எழுப்பியதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் தந்தை - மகன் இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்த வழக்கை மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி  சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த நிலையில்,  இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இது தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் சிபிஐ மேற்கூறிய வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்